அறம் செய விரும்பு - தமிழ் கட்டுரை - 6th term 3 Tamil Katturai Aaram seiyya viruppu - Kalvi Mini

kalviMini,Kalvimini.com,kalvimini quarterly exam question paper 2025,half yearly exam question paper 2025

அறம் செய விரும்பு - தமிழ் கட்டுரை - 6th term 3 Tamil Katturai Aaram seiyya viruppu

 

📑 Table of Contents

    இயல்-2 

    அறம் செய விரும்பு

    முன்னுரை

             மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.நாம் இப்பிறவியில் ஆற்றும் அறச்செயல்கள் எமக்கு மறுமையில் துணைநிற்கும் என்பது இறை நம்பிக்கை. இதனை திருவள்ளுவர் அறத்துப்பாலில் 

    “ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 

    வைத்திழக்கும் வன்க ணவர்”     என்று பாடுகிறார்.

    அறம் எனப்படுவது

            அறம் எனப்படுவது யாதெனில் “அறு” என்ற வினா அடியில் இருந்து தோன்றியதே அறம் ஆகும். மனிதனொருவன் தனக்கென வரையறுத்து கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனப்படுகிறது. பிறவியில் மனிதனை தொற்றி கொண்ட தீவினைகளை அறுத்தெறிவதே அறம் எனவும் கூறலாம். அறம் என்பதற்குத் திருவள்ளுவர் 

    “அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும் 

    இழுக்கா இயன்றது அறம்”    என்கிறார்.

    நற்பண்பு

         மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ வேண்டும். பிறருடையப் பொருளுக்கு ஆசைப்படாமலும், தன்னால் மற்றவர்களுக்குத்

    விளைவிக்காமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதுதான் அவனுடைய நற்பண்பு வெளிப்படுகிறது. தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவரிடம் நற்பண்பு சிறந்தோங்கும். அதன் மூலம் அறம் வெளிப்படும்.

    முடிவுரை

          மேற்கண்ட கருத்துக்களின் மூலம் தென்கச்சியார் சிறந்த அறச்சிந்தனை உள்ளவர் என்பதும், மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் அறியப்படுகின்றன. மேலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள பற்றாலும், மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அறவுரைகளைக் கூறியுள்ளதாலும் இவர் பரந்துப்பட்ட சமுதாய நோக்குடையவர் என்பது புலப்படுகின்றது.