கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு கடிதம்
30, k.kநகர்,
மதுரை – 2.
நாள்: 01.03.2025.
இனிய நண்பா ,
நானும் என் பெற்றோரும் இங்கே நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்கு நீயும் உன் பெற்றோரும் நலமாக இருக்கிறீர்களா ? நான் இங்கு நன்றாகப் படிக்கிறேன். நீயும் அங்கு நன்றாகப் படிப்பாய் என்று எண்ணுகிறேன்.
மாநில அளவில் நடைபெற்ற ” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று நீ முதல் பரிசு பெற்றாய் என்ற செய்தியை நாளிதழ் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே நீ கட்டுரைப் போட்டிகள் பலவற்றில் வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளாய். உன் அழகான கையெழுத்தும் கருத்துச் செறிவும் நூலகப்பயன்பாடும் உறுதியாக உனக்கு ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளதற்கு என்னுடைய பாராட்டுகள். மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு நீ முதல் பரிசு பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.என் மடல் கண்டு நீ அவசியம் பதில் எழுத வேண்டும். உன் பதில் மடலைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.
உன் அன்பிற்குரிய நண்பன்,
அ. பாண்டி.
உறைமேல் முகவரி:
பெறுநர்
ஆ.ராஜா,
16, பாரதியார் தெரு,
k.k நகர்,
மதுரை – 16.