1) நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி, உங்கள் நண்பரையும் நூலினைப் படிக்குமாறு பரிந்துரைத்து நண்பருக்குக் கடிதம் எழுதுக.
![]() |
நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி உங்கள் நண்பரையும் நூலினைப் படிக்குமாறு பரிந்துரைத்து நண்பருக்குக் கடிதம் எழுதுக. |
நண்பருக்குக் கடிதம்
எண்.10,தெற்கு தெரு,
சக்கரப்பநாயக்கனூர் ,
01-03-2025
அன்புள்ள நண்பன்,
இங்கு நான் எனது பெற்றோருடன் நலமாக இருக்கிறேன். அங்கு நீயும் உனது பெற்றோருடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உலகப் பொதுமறை என்று அனைவராலும் போற்றப் படுகின்ற திருக்குறளைத் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் படித்து இருக்க வேண்டும். தினமும் ஓர் அதிகாரம் என்ற அளவில் நான் படித்து வருகிறேன். நீயும் அவ்வாறே படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பொருள்களை உடையது.
உலகிலேயே அதிகளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்.இந்நூலில் எந்த சாதியோ, மதமோ, எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை.. வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும் திருக்குறள் பயன் படாத இடமே இல்லை என்று கூறலாம். 7 சீர்களில் உலக நீதியைச் சொல்லும் திருக்குறளை நீ கண்டிப்பாகப் படிக்க வேண்டும். படிப்பதோடு மட்டுமல்லாமல், திருக்குறள் வழியில் நாம் பயணிக்க வேண்டும். திருக்குறளைப் படித்து விட்டு உன்னுடைய கருத்துக்களை எனக்கு எழுதுக.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்
பாண்டி .
உறைமேல் முகவரி: