இலக்கணம் வேர்ச்சொல் அறிதல் | Tnpsc Illakkanam Versol aarithal - Kalvi Mini

kalvi Mini,Kalvimini.com,10th public question paper 2025 kalvi mini,11th public question paper 2025 kalvi mini,12th public question paper 2025 kalvi mini,6th annual exam 2025,7th annual exam 2025,8th annual exam 2025,9th annual exam 2025, Annual Exam SA term 3 time table 2025, Annual Exam Question paper 2025 kalvi mini

இலக்கணம் வேர்ச்சொல் அறிதல் | Tnpsc Illakkanam Versol aarithal

 

இலக்கணம் - வேர்ச்சொல் அறிதல்:



வேர்ச்சொல் என்றால் என்ன?


ஒரு சொல்லின் மூலச்சொல்லே அச்சொல்லின் வேர்ச்சொல் எனப்படும்.


வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.


கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி அமைந்திருக்கிறதோ அதுவே வேர்ச்சொல் ஆகும்.


(எ.கா):

நினைத்தேன்

விடை : நினை


சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:


சொற்கள் வேர்ச்சொற்கள்

  • பற்றினால் -பற்று

  • ஒடாதே -ஒடு

  • அகன்று -அகல்

  • பார்த்தான் -பார்

  • அறுவடை -அறு

  • கெடுத்தாள் -கெடு

  • இயக்கிடு -இயக்கு

  • பாடிய -பாடு

  • கேட்க -கேள்

  • உற்ற -உறு

  • உருக்கும் -உருக்கு

  • எஞ்சிய -எஞ்சு

  • ஒட்டுவிப்பு -ஒட்டு

  • கண்டனன் -காண்

  • நினைத்தேன் -நினை

  • கொடுதீர் -கொடு

  • ஓடாது -ஓடு

  • கற்றேன் -கல்

  • காத்தவன் -கா

  • காட்சியில் -காண்

  • கொடாமை -கொள்

  • தட்பம் -தண்மை

  • மலைந்து -மலை


வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்:


1. அளித்தல் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - அளி

2. ஆடினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - ஆடு

3. அணிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - அணி

4. அறுந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்                           - அறு

5. இழப்பர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                                - இழ

6. ஈட்டினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                       - ஈட்டி

7. உண்பார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                             - உண்

8. ஊர்ந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்                             - ஊர்

9. எய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                              - எய்

10. ஒழிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - ஒழி

11. ஓதியவர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - ஓதி

12. கண்டோம் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - காண்

13. கொய்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - கொய்

14. செய்யார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - செய்

15. சொல்வான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                   - சொல்

16. தட்டுவான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - தட்டு

17. தெளிந்தனர் என்ற சொல்லின் வேர்ச்சொல்                  - தெளி

18. தொடர்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்              - தொடர்

19. நின்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                            - நில்

20. பிரித்தார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - பிரி

21. புகழ்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                    - புகழ்

22. பெற்றாள் என்ற சொல்லின் வேர்ச்சொல்                        - பெறு

23. வென்றார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                       - வெல்

24. வனைந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                 - வனை

25. உறங்கினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்              - உறங்கு

26. தின்றான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                         - தின்

27. பாடினார் என்ற சொல்லின் வேர்ச்சொல்                          - பாடு

28. நடித்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                        - நடி

29. பற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்                     - பற்று

30. வாழ்க என்ற சொல்லின் வேர்ச்சொல்                                - வாழ்