1. ‘முத்தமிழ்க்காவலர்’ – என அழைக்கப்பட்டவர்?
A. கி.ஆ.பெ. விசுவநாதன்
B. அறிஞர் அண்ணா
C. கலைஞர் கருணாநிதி
D. மு.வரதராசனார்
2. ‘கவிமணி’ என்ற சொல்லால் போற்றப்பெறும் சான்றோர்?
A. வேதநாயகம் பிள்ளை
B. தேசிக விநாயகம் பிள்ளை
C. இராமலிங்கம் பிள்ளை
D. முடியரசன்
3. தாயுமானவர் பாடலின் தொகுப்பு?
A. திருவருட்பா
B. தேவாரம்
C. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
D. நாலாயிர திவ்யப்பிரபந்தம்
4. தாயுமானவர் பிறந்த ஊர் எது?
A. திருவேற்காடு
B. திருமறைக்காடு
C. திருவண்ணாமலை
D. திருவேரகம்
5. தாயுமானவர் மனைவியின் பெயர்?
A. மட்டுவார்குழலி
B. திலகவதியார்
C. இலக்குமி அம்மை
D. பரவையார்
6. பெருமை + அறிவு – சேர்த்தெழுதுக?
A. பெருஅறிவு
B. பெரறிவு
C. பேரறிவு
D. பெருமைஅறிவு
7. ஜி.யு.போப் நாற்பது ஆண்டுகள் படித்த நூல்?
A. திருவாசகம்
B. புறப்பொருள் வெண்பாமாலை
C. புறநானூறு
D. திருக்குறள்
8. “சலவரைச்சாரா” என்றவர்?
A. புல்லங்காடனார்
B. பூதஞ்சேந்தனார்
C. பொய்கையார்
D. கண்ணன் சேந்தனார்
9. ‘தமிழ்த்தென்றல்’ – என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்?
A. திரு.வி.க
B. ம.பொ.சி
C. பாரதியார்
D. சுரதா
10. ‘முத்தமிழ்க் காவலர்’ என்று அழைக்கப்படுபவர்?
A. கி.ஆ.பெ.விசுவநாதம்
B. பேரறிஞர் அண்ணா
C. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
D. சேக்கிழார்
11. ‘இராம காதை’ – அடைமொழியால் குறிக்கும் நூல்?
A. கம்பராமாயணம்
B. சிலப்பதிகாரம்
C. திருப்பாவை
D. நளவெண்பா
12. ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ தொடரால் குறிக்கப்பெறும் நூல்?
A. மணிமேகலை
B. சிலப்பதிகாரம்
C. பெரியபுராணம்
D. நளவெண்பா
13. ‘தமிழ்மறை’ என குறிக்கப்டும் நூல்?
A. அகத்தியம்
B. திருக்குறள்
C. சிலப்பதிகாரம்
D. அகநானூறு
14. ‘வளருதல்’ - என்பதன் எதிர்ச்சொல் தருக?
A. உயர்தல்
B. தேய்தல்
C. பெருகுதல்
D. நீளுதல்
15. ‘இனியது’ - என்பதன் எதிர்ச்சொல் தருக?
A. சுவையானது
B. அரியது
C. இன்னாதது
D. எளியது